¡Sorpréndeme!

Sathiyam Express News | 21 Sep 2019 | மாலை எக்ஸ்பிரஸ் செய்திகள் செய்திகள் | Evening Express News

2019-09-21 16 Dailymotion

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி, ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோர் 21ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம்தேதி நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்கள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வரும் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.